சினிமா

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல படத்தின் இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா

Published On 2017-03-28 07:14 GMT   |   Update On 2017-03-28 07:14 GMT
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல படத்தின் இயக்குனரான தினேஷ் செல்வராஜை இயக்குனர் பாரதிராஜா பாராட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’. இப்படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது. கார்த்திகேயன், ஷாரியா, அருள்ஜோதி, ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை குறித்து இயக்குனர் பாரதிராஜா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, கதைகளின் கருபூலம், கதாபாத்திரங்களின் கதாநாயகன் என் நண்பன் ஆர்.செல்வராஜின் கடைக்குட்டியே. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை’  ஒரு ஜனரஞ்சக படம் மட்டுமல்ல, உயர பறக்க துடிக்கும் இன்றயை இளைஞர்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு. இந்த சமூகத்தில் கொட்டிக்கிடக்கும் உளவியல் உண்மைகளை எந்த சமரசமின்றி திரையில் கொண்டு வந்ததற்காக ஒரு கூடை பூக்கள் உனக்காக காத்திருக்கிறது.



இந்த துணிச்சலும், சமூக சிந்தனையும் மதிப்புக்குரிய மணிரத்னம் அவர்களின் மாணவன் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் காணமுடிகிறது. நேர்த்தியான திரைக்கதை, நுணுக்கமான இயக்கம் என்று சினிமாவின் அத்தனை கிராப்ட்களும் சிறப்பாக அமைந்துள்ளன.

இந்திய சினிமாவில் நாற்பது ஆண்டுகளாக எழுத்தாளனாய் என் நண்பன் செல்வராஜ் தவிர யாரும் ஆட்சி புரிந்ததில்லை. என் நண்பனோடு இணைந்து நீ பணியாற்றியதை மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன். உன்னுடைய இந்த வெற்றிக்கு பின்னால் என் நண்பனின் மகிழ்ச்சியை காணமுடிகிறது. குடும்ப நண்பன் என்ற முறையில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Similar News