சினிமா

ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ பிரமாண்ட விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பு

Published On 2017-03-27 08:33 GMT   |   Update On 2017-03-27 08:33 GMT
ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி-2’ படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நவீன தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்போம்.
உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி-2’ டிரைலர் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை 10  கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். இது உலகின் ‘டாப்-10’ டிரைலரிலும் இடம் பெற்றுள்ளது.

‘பாகுபலி-2’ படத்தில் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தது.  இதில் ராஜமவுலி, பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பிரபல இந்தி டைரக்டர் கரண்ஜோகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நவீன தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக தயாராகி  இருக்கும் ‘பாகுபலி-2’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும் நவீன தொழில்நுட்பமான ‘4 கே’ முறையில் ஒளிபரப்பப்பட்டது. இதன்  மூலம் இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை 360 டிகிரி கோணத்தில் பார்க்க ஏற்பாடு செய்து இருந்தனர்.



யுடியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பான இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை 360 டிகிரி கோணத்தில் பார்க்க முடிந்தது. அடுத்து  சென்னையில் ரஜினி பங்கேற்கும் ‘பாகுபலி-2’ பாடல் வெளியீட்டு விழாவிலும், இதுபோன்ற நவீன தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Similar News