சினிமா

உடனே பணக்காரனாக ஆசைப்படுகிற நாலுபேரின் கதையை சொல்லவரும் புதிய படம்

Published On 2017-03-27 07:09 GMT   |   Update On 2017-03-27 07:09 GMT
உடனே பணக்காரனாக ஆகவேண்டும் என்றும் ஆசைப்படுகிற நாலுபேரின் வாழ்க்கையை மையப்படுத்தி புதிய கதை உருவாகியுள்ளது. அதை பற்றி கீழே பார்ப்போம்.
பிரபல கதாசிரியர் அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் மகனும், இயக்குனர் மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜின், எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படம் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கிறது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திகேயன், ஷாரியா, அருள் ஜோதி, ஜார்ஜ் உள்ளிட் பலர் நடித்துள்ளனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களுடன் தன்னை ஆறாவதாய் இணைத்துக்கொண்ட மெகா பூதம் ‘பணம்’.  இதுதான் நாம் தூக்கத்தில்கூட முணுமுணுக்கிற வார்த்தை. நமக்கு நடக்கத் தெரியாமல் இருக்கலாம், ஓடத் தெரியாமல் இருக்கலாம், நீந்தத் தெரியாமல் இருக்கலாம், எது தெரியாமல் இருந்தாலும் நம்மால் வாழ முடியும். பணம் சம்பாதிக்க தெரியாமல் இருந்தால் நம்மால் வாழவே முடியாது.



விவசாயம் பண்ணினால்தானே அறுவடை செய்ய முடியும். வேர்வை சிந்தி உழைத்தால்தானே பணம் சம்பாதிக்க முடியும். அந்தளவுக்கு சிலருக்கு இங்கே பொறுமையில்லை. பசிக்கும்போது பாஸ்ட் புட் சாப்பாடு சாப்பிடுவது மாதிரி, உடனே பணக்காரனாகணும்னு நினைக்கிற நாலு பேர், கடைசியில் நோ எண்ட்ரியில் போகிற சம்பவம்தான் இந்த படத்தின் மையக்கரு.

எல்லா விளையாட்டிலும் ஒரு விதி இருக்கும், எல்லைக்கோடு இருக்கும். அதை மீறினால் ஆட்டத்தை விட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதுபோல வாழ்க்கையும் ஒரு விளையாட்டுதான். வாழ்க்கையின் விதியை மதிக்காமல், எல்லையை தாண்டி விளையாடுற நாலு போரோட கதைதான் இந்த ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தின் கதை என்று கூறுகின்றனர் படக்குழுவினர். 

Similar News