சினிமா

எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதை நிச்சயம் வாங்குவார்: நடிகர் நாசர் நம்பிக்கை

Published On 2017-03-27 02:29 GMT   |   Update On 2017-03-27 02:29 GMT
8 தோட்டாக்கள் படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் என்று நடிகர் நாசர் கூறியுள்ளார். இதுகுறித்து நாசர் அளித்த விரிவான பேட்டியை கீழே பார்ப்போம்.
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ள படம் '8 தோட்டாக்கள்'. வெற்றிவேல் சரவணா சினிமாஸ்  சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்- ஐபி கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி  கதாப்பாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா  மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



படத்தின் இசை உரிமையை `யு 1 ரெகார்டஸ்' நிறுவனம் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கியிருப்பதால் இப்படத்தின் மேலான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. இதுகுறித்து நடிகர் நாசர் கூறுகையில்,
 
இளம் திறமையாளர்களால் தமிழ் திரையுலகமே தற்போது நிரம்பி கொண்டிருக்கின்றது. விரைவில் அந்த வரிசையில் இணைய  இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அவர் என்னிடம் இந்த கதையை கூறும் போது, அவர் மேல் எனக்கு முழு நம்பிக்கை  வரவில்லை. ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் படக்குழுவினரை கையாண்ட விதம் என்னை முழுவதுமாக வியப்பில்  ஆழ்த்திவிட்டது. எம் எஸ் பாஸ்கர் நடித்த ஒரு காட்சியை பார்த்து விட்டு நான் மெய் சிலிர்த்து போய்விட்டேன். அவரின் இந்த ஒரு  காட்சிக்கு எம்எஸ் பாஸ்கர் நிச்சயமாக தேசிய விருதை பெறுவார் என்று நாசர் கூறினார்.

Similar News