சினிமா

மகாபாரதத்தை அவமதித்தாக கமல் மீது பெங்களூரிலும் வழக்கு

Published On 2017-03-26 08:36 GMT   |   Update On 2017-03-26 08:36 GMT
மகாபாரதத்தை அவமதித்ததாக தமிழகத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், கர்நாடகத்திலும் அவருககு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். கமல்ஹாசனின் இந்த விளக்கம் மகாபாரதத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பின.

இதைத்தொடர்ந்து, வள்ளியூர், கும்பகோணம் ஆகிய நீதிமன்றங்களில் கமல்ஹாசன் மீது மகாபாரதத்தை அவமதித்ததாக இந்து அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையை விரைவாக தொடங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்நிலையில், பெங்களூரிலும் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரணவநந்தா என்ற சாமியார், பெங்களூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், விரைவில் நடத்தவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த புகார்களை தொடர்ந்து கமல்ஹாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Similar News