சினிமா

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடந்தது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது: இயக்குனர் ஷங்கர்

Published On 2017-03-22 10:20 GMT   |   Update On 2017-03-22 10:20 GMT
2.ஓ படப்பிடிப்பில் நடந்த அடிதடிக்கு இயக்குனர் ஷங்கர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சென்னையில் நடந்த 2.ஓ படப்பிடிப்பின்போது தனியார் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களை படக்குழுவினர் தாக்கியதால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், ஷங்கரின் உதவி இயக்குனரும், அவரது உறவினருமான பப்புவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களை சற்றுமுன் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, என்னுடைய படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமுடன் இருப்பேன்.



இருப்பினும், இந்த மாதிரியான ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு வராமல் நடந்துள்ளது. இனிமேல் இதுபோல் நடக்கவிடாமல் பார்த்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று பேசினார்.

இதையடுத்து, 2.ஓ படக்குழுவினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதாக பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பாக பத்திரிகையாளர்கள் ஒன்றுகூடி அறிவித்தனர். இதையடுத்து, இயக்குர் ஷங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Similar News