சினிமா

வருகிற வெள்ளிக்கிழமை, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்

Published On 2017-03-21 02:15 GMT   |   Update On 2017-03-21 02:15 GMT
வருகிற வெள்ளிக்கிழமை அன்று, ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளன. என்னனென்ன படங்கள் ரிலீசாகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாரத்தின் கடைசியிாள, வெள்ளிக்கிழமை தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள்  ரிலீசாகின்றன. ஆனால் ரிலீசாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுவதாக கூற முடியாது. முன்பெல்லாம் 50 நாள்கள்  அல்லது 100 நாள்கள் ஓடினால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் 2 முதல் 3 நாள்கள் திரைகளில் முழுவதுமாக ஓடினாலே வெற்றிப் படம் என கொண்டாடுகின்றனர்.



பொழுதுபோக்கிற்காகவும், மனநிம்மதிக்காகவும் திரையரங்குகளில் படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் மனநிம்மதியுடன் திரும்புகிறார்களா? என்றால்  உறுதியாக கூறமுடியாது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தும் வகையில் ஒரு சில படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான்  இருக்கின்றன.

அந்த வகையில் வருகிற வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 13 படங்கள் ரிலீசாக உள்ளது. இவ்வாறு ஒரே நாளில் பல  படங்கள் ரிலீசாவதால் பல படங்கள் தோல்வியையே சந்திக்கின்றன. வாரவாரம் அடுத்தடுத்து மேலும் பல படங்கள்  வரிசைக்கட்டி நிற்பதால் படத் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.



இதில் கோடை விடுமுறை தொடங்குவதால் ஒரே நாளில் 13 படங்கள் அணிவகுத்து வர இருக்கின்றன. வருகிற 24- ந் தேதி  `பாம்புசட்டை', `என்கிட்ட மோதாதே', `தாயம்', `வைகை எக்ஸ்பிரஸ்', `ஆக்கம்', `ஜுலியும் 4 பேரும்', `1 ஏ.எம்.', `ஒரு கனவு போல',  `இவன் யாரென்று தெரிகிறதா', `465', `கடுகு', `அரசகுலம்', `சாந்தன்' ஆகிய 13 படங்கள் திரைக்கு வருகின்றன.

இதில் திரையரங்குகள் கிடைக்காத பட்சத்தில் ஒரு சில படங்கள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

Similar News