சினிமா
கடலூரில் நடைபெற்ற இந்திராகாந்தி நூற்றாண்டு விழா மாநாட்டில் நடிகை மீனா பேசிய போது எடுத்த படம்.

மகளிர் காங்கிரஸ் மாநாடு: கே.ஆர்.விஜயா, மீனாவுக்கு விருது

Published On 2017-03-20 04:13 GMT   |   Update On 2017-03-20 04:13 GMT
இந்திராகாந்தி நூற்றாண்டையொட்டி கடலூரில் மகளிர் மாநாடு நடந்தது. மாநாட்டில் நடிகைகள் கே.ஆர்.விஜயா, மீனா ஆகியோர் விருது பெற்றனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நூற்றாண்டையொட்டி மாநில மகளிர் மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு ஏற்றி வைத்து, சேவா தள தொண்டர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

மாநாட்டுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா தலைமை தாங்கினார். மாநாட்டை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி வைத்து பேசினார்.



அதையடுத்து மகளிர் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்தை புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திரைப்பட நடிகைகள் கே.ஆர்.விஜயா, மீனா ஆகியோருக்கு இந்திராகாந்தி விருது மற்றும் தங்கப்பதக்கத்தை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி வழங்கி பேசினார். இதில் சின்னத்திரை நடிகைகளும் கவுரவிக்கப்பட்டனர்.

Similar News