சினிமா

பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை

Published On 2017-03-18 10:01 GMT   |   Update On 2017-03-18 10:01 GMT
கேரளாவில் பெண்கள் பாதுகாப்புக்கு நடிகை மஞ்சு வாரியர் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்...
சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் சித்ரவதை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கேரளாவில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுந்தது இல்லை. இங்கு பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

இதனால் கேரள காவல் துறை பெண்களை பாதுகாக்க ‘பிங்க் ரோந்து’ என்ற போலீஸ் பிரிவை தொடங்கி உள்ளது. இதற்கு பெண்கள் தகவல் கொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணுக்கு மகளிர் போலீசார் வந்து உதவுவார்கள்.

இந்த தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மஞ்சு வாரியார் நடித்த 2 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் நள்ளிரவு நேரத்தில் ஆள் இல்லாத ரோட்டில் தனியாக பெண்கள் நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து பேசும் மஞ்சுவாரியார்...


இது போல் பெண்கள் தனியாக நடந்து வரவேண்டியது இருந்தால், வி‌ஷமிகள் தொல்லை ஏற்பட்டால், கல்லூரி மாணவிகள் ஈவ்டீசிங்குக்கு ஆளானால், அல்லது வேறு விதத்தில் உங்களுக்கு பிரச்சனை என்று தெரிந்தால் உடனே ‘பிங்க்’ போலீஸ் ரோந்து பிரிவுக்கு (1515) போன் செய்யுங்கள். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்துக்கு மகளிர் போலீசார் பறந்து வருவார்கள்” என்று குறிப்பிடுகிறார். இந்த வீடியோ கேரளாவில் பிரபலமாகி வருகிறது.

Similar News