சினிமா

இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சுசித்ரா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2017-03-06 05:18 GMT   |   Update On 2017-03-06 05:18 GMT
இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் பாடகி சுசித்ரா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சில நடிகர்-நடிகைகளை பற்றி அவதூறு தகவல்கள் வெளியாகின. ஆனால் தன்னுடைய ‘டுவிட்டர்’ கணக்கை யாரோ முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுசித்ரா சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் ‘அடையாளம் தெரியாத நபர் யாரோ தனது ‘டுவிட்டர்’ கணக்கை முடக்கிவிட்டதாகவும், தனது பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறு தகவல்களை வெளியிடுவதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்’ தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்தநிலையில் நேற்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் ஏ.எம்.ரசூல்மைதீன் கட்சி நிர்வாகிகளோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் பாடகி சுசித்ரா அவரது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நடிகர்-நடிகைகள் பற்றி அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவுசெய்து வருகிறார். இதை நிறைய இளைஞர்கள் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. இதை பார்க்கும் இளைஞர்கள் வழிதவறி செல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

எனவே சுசித்ரா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Similar News