சினிமா

ரிலீசுக்கு முன்பே பாகுபலி-2வை காணும் இங்கிலாந்து ராணி, பிரதமர் மோடி

Published On 2017-03-02 06:32 GMT   |   Update On 2017-03-02 06:32 GMT
‘பாகுபலி-2’ ரிலீசாகும் முன்பே இங்கிலாந்து ராணிக்கும், பிரதமர் மோடிக்கும் காணவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட பிரம்மாண்ட படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது.

முதல் படத்திலேயே காட்சிக்கு காட்சி பிரமிப்பு, பிரம்மாண்டம் என அனைத்தையும் புகுத்தி ரசிகர்களை கட்டிப் போட்டி வைத்திருக்கும் ராஜமௌலி, இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி உலகம் முழுவதிலும் வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னார், இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.



ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகின் பல திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இதில் ‘பாகுபலி 2’ ம் திரையிடப்படவுள்ளது. இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் ‘பாகுபலி-2’ ம் பாகத்தை காணவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

எனவே, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்ப்பதற்கு முன்பாகவே ‘பாகுபலி-2’ படத்தை இந்திய பிரதமர் மோடியும், இங்கிலாந்து ராணியும் இந்த படத்தை பார்த்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும்வரை காத்திருப்போம். 

Similar News