சினிமா

ஒரே நேரத்தில் 3 படங்களின் 2-ம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்

Published On 2017-02-27 11:57 GMT   |   Update On 2017-02-27 11:57 GMT
தனுஷ் ஒரே நேரத்தில் அவர் நடித்த 3 படங்களின் 2-ம் பாகங்களில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
ஒரு காலத்தில் ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த ‘சிங்கம்‘ படம் மூன்று பாகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டது. ‘சென்னை-28’, ‘பசங்க’ உள்ளிட்ட படங்களும் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய படங்களும் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கிறது. இதில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.



பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாலாஜி மோகனே இயக்கவுள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதேபோல், துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான ‘கொடி’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது.

இப்படியாக ‘விஐபி-2’, ‘மாரி-2’, ‘கொடி-2’ என்று மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களில் தனுஷ் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், ‘பவர் பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் நடித்து வருகிறார்.

Similar News