சினிமா

விவசாயிகளுக்காக குரல் கொடுங்கள்: மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த கமல்

Published On 2017-02-26 07:44 GMT   |   Update On 2017-02-26 07:44 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்யவேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க மாணவர்களுக்கு கமல் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் கமல் சமீபகாலமாக தனது டுவிட்டர் பக்கத்தில் சமூக பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களுக்கு குரல் கொடுத்த கமல்ஹாசன், அடுத்தாக தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாகவும் தனது கருத்தை தெரிவித்தார்.

இவரது கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. இந்நிலையில், தற்போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கமல் கூறும்போது, பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும். எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வெற்றியும், இயற்கையை அழிப்பது மற்றும் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதில் இருந்தே தொடங்குகிறது. தமிழக மக்களே விழிப்புணர்வுடன் இருங்கள்.



விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் அமைதியை கடைப்பிடியுங்கள். அதேநேரத்தில் விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் எழுப்புங்கள். உங்களைவிட பெரியவர்கள் உங்களை சமமாக மதிப்பதை உணருங்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News