சினிமா

பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்

Published On 2017-02-24 15:49 GMT   |   Update On 2017-02-24 15:49 GMT
பொதுமக்களுடன் இணைந்து விஷால் மற்றும் அவரது தேவி அறக்கட்டளை நிர்வாகிகள் சீமக்கருலே மரங்களை அகற்றினர். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது  மக்கள் இணைந்து சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் பயன்படுத்தும் நெல்களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முள் புதர்களாக  இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த இடங்களை சுத்தம் செய்து மரக்கன்றுகளையும்  நட்டு வைத்தனர்.



நடிகர் விஷால் அவர்களுடன் சேர்ந்து நடிகர் செளந்தர்ராஜா, ஹரி உள்ளிட்டோர் அந்த பகுதியை சேர்ந்த ரங்கநாயகி, காளிதாஸ்,  ரமேஷ், மற்றும் அண்ணாமலை பல்கலைகழக துணை வேந்தர் மணியன், கல்வி இயக்குனர் மணிவண்ணன், கிராமத்துறை  தலைவர் தேசிகன், பாலமுருகன் இவர்களுடன் NSS மாணவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், கடலூர் மாவட்ட  நாடக சங்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், விஷால் நற்பணி இயக்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு இந்த சமுக  பணியில் ஈடுபட்டனர்.

Similar News