சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `விஜய் 63' படம்: `விஜய் 62' யாருடன் தெரியுமா?

Published On 2017-02-23 02:07 GMT   |   Update On 2017-02-23 02:07 GMT
அட்லி இயக்கத்தில் விஜய் 61 படத்தில் நடித்து வரும் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `விஜய் 63' படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. `விஜய் 62' படத்தில் யாருடன் இணைய உள்ளார் என்பதை கீழே பார்ப்போம்.
`துப்பாக்கி', `கத்தி' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதி  செய்யப்பட்டுள்ளது. `பைரவா' படத்திற்கு பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்பாத படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாசுடன் இணைவார் என்று கூறப்படும் நிலையில், விஜய்-யின் 62-ஆவது படத்தை  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என்ற தகவல் பரவி வருகிறது. மாறாக விஜய்யின் 63-வது படத்தை முருகதாஸ் இயக்குவார்  என்றும் மற்றொரு தகவல் வந்த வண்ணம் உள்ளது.



ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையும் அடுத்த படத்தின் வேலைகள் தீவிரவமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தனது  அடுத்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையில் நடிக்க விருப்பமாக உள்ளாராம்.

இதற்கு முன்னதாக விஜய் `சுறா', `வேலாயுதம்' என்ற இரு அதிரடி படங்களுக்கு இடையே `காவலன்' என்ற முற்றிலும் மாறுபட்ட  காதல் கதையில் நடித்தார். பின்னர் `வேலாயுதம்', துப்பாக்கி ஆகிய இரு மாஸ் படங்களுக்கு இடையே `நண்பன்' என்ற கிளாசிக்  படத்தில் நடித்தார். பின்னர் `கத்தி', `தெறி' ஆகிய இரு அதிரடி வெற்றிப் படங்களுக்கு நடுவே `புலி' என்ற மாறுபட்ட கற்பனைக்  கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது அட்லியுடன் இணைந்துள்ள விஜய் அடுத்தாக கதாபாத்திரத்தில்  முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். மேலும் அதற்கான பேச்சுவாரத்தையில் ஈடுபட்டுள்ளாராம்.  சரியான கதை அமைந்தால் அந்த படத்தை விரைவில் முடித்து பின்னர், முருகதாஸ் இயக்கத்தில் தனது 63-வது படத்தில்  நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.



இதற்காக இயக்குநர் செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏற்ற வலுவான  கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட கதை கிடைத்தால் `விஜய் 62' படத்தை செல்வராகவன் இயக்கலாம் என்று செய்திகள் உலாவி  வருகின்றன. அதன் பின்னர் `விஜய் 63' படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனினும்  இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு காத்திருக்கத் தான் வேண்டும்.

Similar News