சினிமா

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு: கேரள முதல்வருக்கு விஷால் கடிதம்

Published On 2017-02-20 10:57 GMT   |   Update On 2017-02-20 10:57 GMT
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள முதல்வருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் விஷால் பிச்சாவரத்தில் தங்கி உள்ளார். இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாவனா போல்  பல பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன் கொடுமைகள் வெளியில் தெரிவது இல்லை.

அப்படியே தெரிந்தாலும் சரியான நடவடிக்கை இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் குட்டச், பேட்டச் சொல்லி வளர்க்க  வேண்டும், அரசும் மாணவர் களுக்கு செக்ஸ் கல்வியை பாடமாக கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக பெண் களுக்கு எதிராக வன் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடுமையான  சட்டம் கொண்டு வந்து தண்டனை வழங்க வேண்டும்.

இப்போது தமிழகத்தில் உள்ள நிலையை பார்க்கும் போது டி.வி.யை பாக்கவே வெறுப்பாக உள்ளது. யார் வந்தாலும்  பிரச்சினையில்லை. வந்த வர்கள் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் ஒரு பைசா கூட வாங்காமல் வாக்களிப்  பார்கள். இந்த தேர்தலில் சிலர் காசு வாங்கியதால் இப்போது நடக்கும் சம்பவத் திற்கு குற்ற உணர்ச்சியுடன் கூனிகுறுகி  நிர்கிறார்கள்.

விவசாயிகளின் கடன் களையும், ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வாங்கிய கடன்களையும் ரத்து செய்யவேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதரத்தை அழிக்கும் சீமைகருவேலமரங்களை முற்றிலும் அழிக்க உறுது ணையாக இருப்பேன். பல  இடங்களில் நண்பர்கள், ரசிகர்கள் உதவியுடன் அழித்து வருகிறேன்.

சிதம்பரம் பகுதியில் இதனை அழிக்க விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களை கொண்டு ஏற்பாடு செய்துள்ளேன்.

விவசாயிகளின் வாழ்வில் உள்ள குறைபாடு களை உணர்வு பூர்வமாக அறிய விரைவில் தஞ் சையில் 5 ஏக்கர் நிலம் வாங்கி  விவசாயம் செய்து விவசாயிகளின் கடன்களுக்கு முற்றுபுள்ளி வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News