சினிமா

எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கருத்து: கமல் மீது கமி‌ஷனரிடம் புகார்

Published On 2017-02-20 09:47 GMT   |   Update On 2017-02-20 09:47 GMT
தொகுதிக்கு வரும் எம்எல்ஏக்களை வரவேற்பு அளிப்பது தொடர்பாக நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கருத்து வெளியிட்ட நிலையில் அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் பிர்தவ்ஸ் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். இது மக்களை வன்முறைக்கு அழைத்து செல்லும்.

விரும்பிய அரசு அமையவில்லை என்பதனால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். கமலஹாசனின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பயன்படுத்தி தொகுதி மக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு கமலஹாசனே பொறுப்பு ஏற்கவேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News