சினிமா

பாவனாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து நடிகர், நடிகைகள் மௌனப் போராட்டம்

Published On 2017-02-20 05:08 GMT   |   Update On 2017-02-20 05:08 GMT
பாவனாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து மல்லுவுட் நடிகர், நடிகைகள் நேற்று மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பாவனா. இவர் தமிழில் 'தீபாவளி', 'சித்திரம் பேசுதடி', 'அசல்',  'ஜெயம் கொண்டான்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர், நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு திருச்சூர் அருகே நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு நடிகை  பாவனா கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்,  மர்ம கும்பல் ஒன்று இவரது காரை வழிமறித்து, காரில் ஏறி அவரிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக செய்திகள்  வெளிவந்தது.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவர் உள்பட 7 பேரை கேரளா போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னணி நடிகைக்கு  நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், மல்லுவுட் சார்பில்  நடிகர், நடிகைகள் இணைந்து கேரள மாநிலம் கொச்சியில் நேற்று மாலை மௌனப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Similar News