சினிமா

ஜல்லிக்கட்டு விவகாரம்: சூர்யாவிடம் மன்னிப்பு கோரியது பீட்டா அமைப்பு

Published On 2017-01-28 12:34 GMT   |   Update On 2017-01-28 12:34 GMT
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சூர்யா நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து பீட்டா அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்தன.மேலும்  ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும்  பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து, சூர்யாவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டா அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில்,  நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக  இருக்கிறது. சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியது தற்செயலாக நடந்தது கிடையாது. அவருடைய `சி3' படத்தை  விளம்பரப்படுத்துவதற்காக அவ்வாறு பேசியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்கும்படி  பீட்டா அமைப்புக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

சூர்யாவின் நோட்டீசுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்கும் படி அதில் குறிப்பிட்டிருந்த நிலையில், பீட்டா அமைப்பு சூர்யாவிடம்  மன்னிப்பு கோரியுள்ளது.

மன்னிப்பு குறித்து பீட்டா அனுப்பிய அறிக்கை,

நோட்டீசில் சூர்யா தெரிவித்திருந்தது அனைத்தும் உண்மையே. நாங்கள் உங்களது எதிரான அனைத்து கருத்துக்களுக்கும்  மன்னிப்பு கோருகிறோம். நீங்கள் அகரம் என்ற பெயரில் ஒரு நல்ல அமைப்பு நடத்தி வருவது எங்களுக்கு தெரியும். எனவே  நாங்கள் தவறுதலாத தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

Similar News