சினிமா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக `துருவங்கள் பதினாறு' படக்குழு புதிய அறிவிப்பு

Published On 2017-01-21 12:33 GMT   |   Update On 2017-01-21 12:33 GMT
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக `துருவங்கள் பதினாறு' படக்குழு ஒருநாள் வசூலை அளிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்க்கலாம்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் சினிமா பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக உருவெடுத்துள்ள கார்த்திக் நரேன், தனது பங்குக்கு `துருவங்கள் பதினாறு' படத்தின் நாளை ஒருநாள் வசூலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மற்றும் போராட்டக்காளர்களுக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘துருவங்கள் பதினாறு’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ரகுமான் நடிப்பு பெரிதும் பேசப்படுகிறது. புதுமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போது அந்த இயக்குனரை நம்பிய ரகுமானுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு காரணமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேனை திரைஉலகில் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூத்த டைரக்டர்களும் சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இது வரை யாரும் சொல்லாத திரைக்கதையில் சொன்னது, கார்த்திக் நரேனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது.

நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரையங்குகளில் கூட்டம் இருக்கும் என்பதால் நாளை நல்ல வசூல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Similar News