சினிமா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு

Published On 2017-01-20 10:39 GMT   |   Update On 2017-01-20 10:39 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் பார்த்திபன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டக்களத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு உறுதுணையாக நடிகர்கள் பலரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை புதுமையான முறையில் வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு உள்நாட்டு சதியா, வெளிநாட்டு சதியா என்று தெரியாத நிலையில், நம்முடைய நியாயமான உணர்வை வெளிப்படுத்துவதற்கு இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறோம். நான் தற்போது நடிகர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறேன்.

நான் இரண்டு மூன்று நாட்களாக மெரீனாவில் நடந்துவரும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். அங்கு சென்று பார்த்தபோது அந்த இளைஞர்களுடைய உணர்வலைகளின் வெப்பம் ரொம்பவும் பெரிதாக இருந்தது. நம்முடைய நாட்டுக்குள்ளேயே நம்முடைய உரிமையை பெறுவதற்கு இவ்வளவு பெரிய போராட்டமா? இது எனக்கு மிகப்பெரிய துக்கமாக இருக்கிறது.

இதை வெளிப்படுத்த என்னுடைய வீட்டு வாசலில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். நாளை முதல் இந்த போராட்டத்தை தொடங்கவிருக்கிறேன். இது என்னுடைய துக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய தன்மை. இது இந்திய இறையாண்மைக்கு எதிரான விஷயமும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி நான் இருக்கும் அறவழியிலான போராட்டம் என்று கூறினார்.

Similar News