சினிமா

ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

Published On 2017-01-12 05:03 GMT   |   Update On 2017-01-12 05:03 GMT
ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த புதிய படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
வளர்ந்து வரும் நடிகர்களில் தற்போது ஜி.வி.பிரகாஷ் கைவசம்தான் நிறைய படங்கள் இருக்கிறது. இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘புருஸ்லீ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக அடங்காதே, 4ஜி, ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அதர்வா நடிப்பில் உருவாகி வெளிவந்த ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்திலும் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படத்திற்கு ஐங்கரன் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷின் தோற்றத்தையும் வித்தியாசமாக காட்டியுள்ளனர். இப்படத்தை காமன் மேன் என்ற நிறுவனம் சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Similar News