சினிமா

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?

Published On 2016-12-03 05:48 GMT   |   Update On 2016-12-03 05:48 GMT
விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக  அமைந்திருக்கிறது.

இதனால் தனது அடுத்தடுத்த கதைகளை மிகவும் கவனத்துடன் விஜய் சேதுபதி தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் இயக்கும் புதிய படமொன்றில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங்கும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'பீட்சா', 'சூது கவ்வும்', 'இறைவி', 'ஜிகர்தண்டா' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி-பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News