சினிமா

ஜி.வி.பிரகாஷின் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா?

Published On 2016-11-08 12:15 GMT   |   Update On 2016-11-08 12:15 GMT
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தை திருச்சி, தஞ்சை பகுதிகளில் வெளியிட்டவர் சிங்காரவேலன். இவர், சேலம் பகுதியில் வெளியிட 7ஜி பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதன்படி, அந்த நிறுவனம் ரூ.6.50 கோடியை கொடுக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தத்தின்படி முழு தொகையையும் கொடுக்கவில்லை. ரூ.62 லட்சம் பாக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 7 ஜி நிறுவனம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதையடுத்து இந்த படத்துக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், வருகிற நவம்பர் 10-ந் தேதி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீசாவதாக இருந்தது. ஐகோர்ட்டின் தடையால் படம் வெளிவருவதில் சிக்கல் எழுந்துள்ளது. இருப்பினும், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திட்டமிட்டபடி நவம்பர் 10-ந் தேதி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீசாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Similar News