சினிமா

முத்தக்காட்சி நீக்கம் மேல்நாட்டு மருமகன் படத்துக்கு யூ சான்றிதழ்

Published On 2016-11-05 10:14 GMT   |   Update On 2016-11-05 10:14 GMT
ராஜ்கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் மேல்நாட்டு மருமகன் திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ராஜ்கமல், பிரான்ஸ் நாட்டு பெண் ஆண்ட்ரீயன் நாயகன்-நாயகியாக நடித்துள்ள படம் ‘மேல்நாட்டு மருமகன்’. எம்.எஸ்.எஸ்.இயக்கியுள்ள இதை உதயா கிரியே‌ஷன் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ளார்.

விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.எஸ். கூறும்போது '‘ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க பல நாடுகளுக்கு பறந்தாலும். பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் நமது நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதே இந்த படத்தின் கரு.படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டோம்.

பார்த்த அவர்கள் ஒரு வசனத்தையும், நாயகன்- நாயகி நடித்த ஒரு முத்தக்காட்சியையும் நீக்கினால் தான் ‘யூ' சான்றிதழ் கொடுப்போம் என்று கூறினார்கள். முத்தக்காட்சியை நீக்க ஒப்புக்கொண்டேன். அந்த வசனத்துக்கு பதில் வேறொரு வசனத்தை வைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து, படத்தை பாராட்டி யூ சான்றிதழ் வழங்கினார்கள். நம் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சொல்ல வரும் இந்த  மேல் நாட்டு மருமகன் விரைவில் திரைக்கு வருகிறான்” என்றார்.

Similar News