சினிமா

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்

Published On 2016-10-23 08:12 GMT   |   Update On 2016-10-23 08:12 GMT
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
‘இறைவி’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தே. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. அதற்கான பணிகளை கார்த்திக் சுப்புராஜ் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடைபெறப் போவதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருப்பதால் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரையும் நடிக்கவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



ஹாலிவுட் நடிகர் அல் பசினோ

அதன்படி, ‘காட் பாதர்’, ‘சென்ட் ஆப் தி உமன்’ உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்த அல் பசினோவிடம் தற்போது படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ‘சென்ட் ஆப் தி உமன்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தை தனுஷ் ஒரு பிரபல நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

Similar News