சினிமா

கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள்

Published On 2016-10-07 02:47 GMT   |   Update On 2016-10-07 02:48 GMT
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஒரு இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர்-நடிகைகளின் வாரிசுகள் பலர் சினிமா தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் டைரக்டர்களாகி உள்ளனர். கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் கதாநாயகியாகியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் அவர் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இன்னொரு மகளான அக்‌ஷராவும் நடிக்கிறார்.

முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இன்னொரு முன்னாள் கதாநாயகியான மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வருகிறார். கைநிறைய படங்கள் வைத்து அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது ஸ்ரீதேவி மகள் ஜானவியும் நடிக்க வருகிறார். ஸ்ரீதேவி, 1970 மற்றும் 80-களில் தமிழ், தெலுங்கு, இந்தி படவுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். பின்னர் இந்தி பட அதிபரும் நடிகர் அனில்கபூரின் சகோதரருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜானவி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்களை பட விழாக்களுக்கு அடிக்கடி ஸ்ரீதேவி அழைத்து வந்தார். ஜானவியை கதாநாயகியாக அறிமுகம் செய்ய இயக்குனர்கள் பலர் விரும்பினர். தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக நடிக்க வைக்கவும் அணுகினர். ஆனால் ஸ்ரீதேவி சம்மதிக்கவில்லை. ஜானவி படிக்கவேண்டி உள்ளது. இப்போது நடிக்கமாட்டார் என்று கூறி விட்டார்.

இந்த நிலையில், ஜானவியை ஒரு இந்தி படத்தில் அறிமுகப்படுத்த ஸ்ரீதேவி தற்போது முடிவு செய்துள்ளார். பிரபல இயக்குனர் கரன்ஜோகர் டைரக்டு செய்யும் படத்தில் வருண் தவான் ஜோடியாக அவர் நடிக்கிறார். கடும் உடற்பயிற்சிகள் மூலம் ஜானவி கதாநாயகி தோற்றத்துக்கு தன்னை மாற்றி இருக்கிறார்.

Similar News