சினிமா

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு

Published On 2016-09-28 07:28 GMT   |   Update On 2016-09-28 07:28 GMT
சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தவறு என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்...
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகும் தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படமும் வெளியாகவிருக்கிறது. இவ்விரு படங்களும் போட்டியாக களமிறங்கும் நேரத்தில் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ ஸ்டைலில் ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு போஸ் கொடுத்து அவரை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி பேசும்போது, ‘றெக்க’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த ஸ்டைலான போஸ் ஒன்றை கொடுத்திருப்பேன். இப்படியொரு காட்சியை இயக்குனரிடம் வைக்க சொன்னது நான்தான்.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் எல்லாரையும் நிறைய பேர் கொண்டாடிவிட்டார்கள். என் சமகாலத்தில் எனக்கு போட்டி என்று கூறப்படும் சிவகார்த்திகேயன் படத்தை கொண்டாடுவதில் என்ன தப்பு? அதில் எனக்கு சந்தோஷமே. எந்த வருத்தமும் இல்லை. ‘ரெமோ'வும் ஓடட்டும் 'றெக்க'யும் ஓடட்டும். இரண்டையும் ஒப்பிட வேண்டாம் என்று பேசினார். 

Similar News