சினிமா

அஜித் படத்துக்கு வில்லன் ரெடி

Published On 2016-09-28 05:39 GMT   |   Update On 2016-09-28 05:39 GMT
அஜித் படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பவர் உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்..
அஜித் படங்களின் நடிகர், நடிகையர்களின் விவரங்கள் ரொம்பவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும். இருப்பினும், அவர் படத்தில் நடிப்பவர்களுடைய விவரங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடுகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு முதலில் யார் ஹீரோயின் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறார் என்பது அரசல் புரசலாக பேச்சு அடிபடவே, இறுதியில், படக்குழுவினரே காஜல் அகர்வால்தான் ஹீரோயின் என்பதை உறுதி செய்தனர். அதன்படி, தற்போது அஜித் படத்தின் வில்லன் தேடுதல் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடைசியில், ஒரு பாலிவுட் நடிகர் ஒருவரை இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் யார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் வெளியாகும்போது அந்த வில்லனை அறிமுகப்படுத்தலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரசன்னா, அரவிந்த்சாமி ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News