சினிமா

விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ பூஜையுடன் தொடங்கியது

Published On 2016-09-26 05:03 GMT   |   Update On 2016-09-26 05:03 GMT
விஷால் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துப்பறிவாளன்’ படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது.

விஷால் நடிக்கும் இப்படத்தில் கே.பாக்யராஜ், பிரசன்னா, வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஆரோல் கரோலி இசையமைக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று நடந்த பூஜையில் இயக்குனர் மிஷ்கின், நடிகர்கள் விஷால், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News