சினிமா

அதர்வா-நயன்தாரா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

Published On 2016-09-25 08:29 GMT   |   Update On 2016-09-25 08:29 GMT
அதர்வா-நயன்தாரா இணையும் புதிய படம் இளம் இசையமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...
அதர்வாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ‘இமைக்கா நொடிகள்’ என்ற புதிய படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஆர்.டி.ராஜேசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனகர்த்தாவாக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News