சினிமா

உருவாகிறது சதுரங்க வேட்டை 2 : அரவிந்த் சாமி ஜோடியாகியார் திரிஷா

Published On 2016-09-23 09:30 GMT   |   Update On 2016-09-23 09:31 GMT
சதுரங்கவேட்டை இரண்டாம் பாகத்தில் அரவிந்த் சாமி ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. இப்படத்தை வினோத் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பாளர் மனோபாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அப்படத்தில் அரவிந்த் சாமி நடிப்பது ஏற்கெனவே உறுதியாகியிருந்த நிலையில், தற்போது அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கவிருக்கிறார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இப்படம் தற்போது தினம் தினம் மெருகேறி வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகர்வாழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை சொல்லவிருக்கிறார்கள்.

இப்படத்தில் நாசர், ராதாரவி, பொன்வண்ணன், ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கின்றனர். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் மனோபாலா தயாரிக்கவிருக்கிறார். 

Similar News