சினிமா

பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து: அல்லு அர்ஜுன்

Published On 2016-09-22 06:50 GMT   |   Update On 2016-09-22 07:45 GMT
பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து என அல்லு அர்ஜுன் பேசியுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது.

இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார்.

அவர் பேசும்போது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கிட்டத்தட்ட 20 வருடங்கள் சென்னையில் வாழ்ந்திருக்கிறேன். இப்போது 15 வருஷமாகத்தான் ஐதராபாத்தில் தங்கியிருக்கிறேன். நான் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றாலும், நான் பிறந்து, வளர்ந்த இந்த சென்னையில் சாதிக்கவேண்டும். அதுதான் கெத்து. அதற்காகத்தான் நான் 10 வருஷமாக காத்திருந்தேன்.

இப்போது லிங்குசாமி சொன்ன கதை பிடித்துப்போனதும் உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் இரண்டு பேரையும் கவரும். இப்படிப்பட்ட ஒரு கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன். இந்த கதையை கொடுத்த லிங்குசாமிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது, இப்படம் எங்களது நிறுவனம் தயாரிக்கும் 12-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. இதுவரை பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளோம். இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Similar News