சினிமா

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தமிழ் படம்

Published On 2016-09-22 06:00 GMT   |   Update On 2016-09-22 06:00 GMT
அல்லு அர்ஜுன் தமிழில் நேரடியாக நடிக்கும் புதிய படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பிறகு லிங்குசாமி எந்த படமும் இயக்கமால் தயாரிப்பு பணியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இடையில், விஷாலை வைத்து சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார். இதற்காக பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படம் தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தனது 12-வது தயாரிப்பாக தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் யாரும் இன்னும் தேர்வாகவில்லை. மேலும், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரமும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இப்படத்திற்கு இன்னும் தலைப்பும் தேர்வு செய்யப்படவில்லை. 

Similar News