சினிமா

மீண்டும் இணையும் 'ரெமோ' கூட்டணி

Published On 2016-08-27 14:19 GMT   |   Update On 2016-08-27 14:19 GMT
'ரெமோ' இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சமீபத்தில் 'ரெமோ' படத்தின் முதல் பிரதியை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா படம் மிகவும் நன்றாக வந்திருப்பதால் பாக்யராஜ் கண்ணனின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி 'ரெமோ' படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News