சினிமா

விஜய் சேதுபதியின் தர்மதுரைக்கு கிடைத்த பாராட்டு

Published On 2016-08-27 11:39 GMT   |   Update On 2016-08-27 11:39 GMT
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கும் தர்மதுரை படத்தை மருத்துவர் ஒருவர் பாராட்டியிருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் சமீபத்தில் வெளியான 'தர்மதுரை' திரைப்படம் தன்னை வெகுவாகக் கவர்ந்தது என்று பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து குருசங்கர் கூறும்போது 'மருத்துவர்களின் உயர்நோக்கங்களையும், மருத்துவத் துறைகளின் உண்மைகளையும் இப்படம் எடுத்துக் காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கிராமங்களில் மருத்துவர்களின் தேவைகளை எடுத்துக் கூறும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வதைவிட இந்தியாவில் பணிபுரிதலின் முக்கியத்துவத்தை 'தர்மதுரை' மூலம் இயக்குனர் சீனு ராமசாமி எடுத்துக் கூறியிருக்கிறார்.

இத்திரைப்படம் என்போன்ற மருத்துவர்களுக்கு மகிழ்ச்சியையும், திரைத்துறை மீது நம்பிக்கையையும் வளர செய்துள்ளது.எல்லா மருத்துவர்களும், மருத்துவத்துறை மாணவர்களும் மற்றும் செவிலியர்களும் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன்' என்றார்.

Similar News