சினிமா

‘கபாலி’ பாணியில் ‘தாதா’வாகும் சாருஹாசன்

Published On 2016-08-27 10:14 GMT   |   Update On 2016-08-27 10:14 GMT
நடிகர் சாருஹாசன் தாதா வேடத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.

கமலின் சகோதரும், சுஹாசினியின் தந்தையுமான சாருஹாசன் பல்வேறு மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். ‘தாபரணகதா’ என்ற கன்னடப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும், மாநில அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். ‘குபிமாட்டு இயலா’ என்ற கன்னட படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசின் விருது பெற்றார்.

85 வயதாகும் சாருஹாசன் நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் விஜய்ஸ்ரீ கதை எழுதி இயக்கும் இந்த படத்தில் சாருஹாசனுக்கு ‘கபாலி’ படபாணியில் வயதான தாதா வேடம்.

இதில், நடிக்கும் அனைவருமே மேக்கப் இல்லாமல் நடிக்க இருக்கிறார்கள். ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிகாஷ் நிக்கி இசை அமைக்கிறார்.

Similar News