சினிமா

கவுண்டமணி படம் உள்பட இன்று ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்

Published On 2016-08-26 06:23 GMT   |   Update On 2016-08-26 06:23 GMT
கவுண்டமணி நடிப்பில் உருவாகி தயாராக இருந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. 1 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன.
நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் அதிகவரவேற்பு அளித்து வருகிறார்கள். பிரபல நாயகர்களுக்கு ஓரளவு மவுசு இருந்தாலும், கதை நன்றாக இருந்தால் தான் படங்கள் ஓடும் என்ற நிலை உள்ளது.

ரஜினியின் ‘கபாலி’ படம் திரைக்கு வந்ததையடுத்து, சிறிய பட்ஜெட் படங்கள் சில வாரங்களாக ரிலீஸ் ஆகவில்லை. கடந்த வாரம் 3 படங்கள் திரைக்கு வந்தன. 1 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 7 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன.

கவுண்டமணி நடிப்பில் உருவாகி தயாராக இருந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இது தவிர மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தட்டத்தின் மறையத்த’ படத்தின் ரீமேக் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் வெளியாகிறது. மித்ரன்ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். 2 வாரங்களுக்கு முன்பே வெளியிட திட்டமிடப்பட்டு இப்போது வந்திருக்கிறது.

இன்னொருபடம் தாய், மகன் பாசப்போராட்டத்தை கூறும் ‘வென்று வருவான்’. இதை தயாரித்து இயக்கி இருப்பவர் விஜேந்திரன். இது தவிர உளவியல் திரில்லர் படமான ‘54321’, குறைந்த செலவில் உருவான ‘ஜாக்கோபார்’ திகில் கதையான 'பயம் ஒரு பயணம்' இவற்றுடன் , அந்த குயில் நீதானா’ என மொத்தம் 7 படங்கள் இன்று மோதுகின்றன. இவை தவிர ஆங்கில படங்களான ‘மெக்கானிக்-2’, ‘பிளையிங்ஜாட்’ ஆகியவையும் போட்டிக்கு வந்திருக்கின்றன.

Similar News