சினிமா

அருண்விஜய் நடிக்கும் ‘குற்றம் 23’ ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது

Published On 2016-08-24 07:20 GMT   |   Update On 2016-08-24 07:20 GMT
அருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் 23’ படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த தேதி? என்பதை கீழே பார்ப்போம்...
‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படம் ‘குற்றம் 23’. இப்படம் மெடிக்கல் திரில்லராக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ள மகிமா நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் அருண் விஜய் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இன் சினிமா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யே இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஆடியோ வெளியீட்டை தொடர்ந்து விரைவில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News