சினிமா

மலேசியாவில் மாரத்தான் போட்டி: கபாலி மேலும் ஒரு சாதனை படைத்தது

Published On 2016-07-31 06:14 GMT   |   Update On 2016-07-31 06:14 GMT
மலேசியாவில் கபாலிக்காக மாரத்தான் போட்டி நடத்தி மேலும் ஒரு சாதனையை படைக்க வைத்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. டீசரில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரே இந்திய படம் இதுதான். முதல்நாள் ஓப்பனிங்கில் சாதனை படைத்த ஒரே படமும் இதுதான். ஆசியாவிலேயே விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்ட முதல்படமும் இதுதான். அதுமட்டுமல்ல, வசூலிலும் இந்திய சினிமாவில் இதுவரை எந்த சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை இந்த படம் நிகழ்த்தி வருகிறது.

இப்படி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடி வரும் ‘கபாலி’ படம் தற்போது இன்னொரு சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது. மலேசியாவில் வாழும் ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து இன்று ‘கபாலி’ படத்திற்காக மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


உலகத்திலேயே ஒரு படத்துக்காக மாரத்தான் போட்டி நிகழ்த்தப்படுவது இதுதான் முதல்முறை. அந்த சாதனையை ‘கபாலி’ படம் நிகழ்த்தியுள்ளது தமிழ் சினிமாவுக்கே உரிய பெருமை. இந்த பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘கபாலி’ ரஜினி உருவம் பொரித்த கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. ஏராளமான ரசிகர்கள் இந்த மராத்தான் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.


‘கபாலி’ படத்திற்கு இந்தியாவில் எந்தளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதேயளவு மலேசியா, சிங்கப்பூரிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியா, சிங்கப்பூரில் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் இருக்கிறது. அதனாலேயே இந்த படத்திற்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

Similar News