சினிமா

சிம்புவுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி சுரேஷ்?

Published On 2016-07-30 09:21 GMT   |   Update On 2016-07-30 09:21 GMT
சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
சிம்பு தற்போது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில், சிம்பு மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஏற்கெனவே, ஸ்ரேயா ஒப்பந்தமாகி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்னொரு சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையிலும் படக்குழுவினர் களமிங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே மஹத், ஒய்.ஜி.மகேந்திரன், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Similar News