சினிமா

கபாலி படத்தின் நீளம் குறைப்பா?

Published On 2016-07-25 09:11 GMT   |   Update On 2016-07-25 09:11 GMT
ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
ரஜினியின் ‘கபாலி’ உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் திரைக்கு வந்தது. முதல் நாளில் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது. ரசிகர்கள் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

‘கபாலி’ படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. சில காட்சிகள் பற்றி விமர்சனம் எழுந்தாலும், ரஜினி இந்த படத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். படத்தின் பின்பகுதி மெதுவாக செல்வதாகவும் அதை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை படத்தயாரிப்பாளர் தரப்பில் சேகரித்து வருவதாக தெரிகிறது.

படம் பற்றிய கருத்துக்களை தொடர்ந்து கேட்டு அறிந்து வருகிறார்கள் ரசிகர்கள் விருப்பப்படி படத்தின் பிற்பகுதியில் 12 நிமிட காட்சிகளை ‘டிரிம்‘ ஆக்கி நீளத்தை குறைத்துள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் டிரிம் செய்யப்பட்ட ‘கபாலி’ படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் செய்திகள் வெளிவந்தது.

இதுகுறித்து ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம் கேட்கும்போது, படத்தின் நீளத்தை குறைக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் வெறும் வதந்திதான். ‘கபாலி’ படம் ரசிகர்களின் ஆதரவும் பெரிய வெற்றியடைந்துள்ளது. படத்தின் நீளத்தை குறைப்பது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.

Similar News