சினிமா

வெளியாகும் முன்பே இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா

Published On 2016-07-24 10:34 GMT   |   Update On 2016-07-24 10:34 GMT
வெளியாகும் முன்பே இணையதளத்தில் கபாலி படம் லைவ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சௌந்தர்யா கடுப்பானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து கீழே பார்ப்போம்...
ரஜினி நடிப்பில் இந்தியா முழுவதும் ஜுலை 22-ந் தேதி வெளிவந்த ‘கபாலி’ படம் இரண்டு நாட்களை கடந்தும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இந்தியாவில் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே வெளிநாடுகளில் வெளியானது. இந்த படத்துக்கு திருட்டு விசிடி வந்துவிடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்த படக்குழுவினரின் முயற்சியையும் தாண்டி இணையதளத்தில் இப்படம் வெளிவந்துவிட்டது.

இது படக்குழுவினருக்கு சோகத்தை தந்துகொண்டிருக்கும் வேளையில் தற்போது, படம் வெளிவருவதற்கு முன்பே இணையதளத்தில் லைவ் அப்டேட் செய்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சினிமா பற்றிய செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல இணையதளம் ஒன்று இந்தியாவில் ‘கபாலி’ படம் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாகவே தனது இணையதளத்தில் ‘கபாலி’ படத்தை காட்சிக்கு காட்சி லைவ் அப்டேட் செய்துள்ளது.

இந்த ‘கபாலி’ லைவ் அப்டேட் பார்த்த பல ரசிகர்கள் கடுப்பாகி, அதனை நிறுத்துமாறு இணையதளத்திற்கு கமெண்டுகள் மூலம் தெரிவித்தனர். இருப்பினும், அந்த இணையதளம் ‘கபாலி’ லைவ் அப்டேட்டை நிறுத்தியபாடில்லை. இறுதியாக, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதில் தலையிட்டு, மக்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் ‘கபாலி’ படத்தை பார்த்துக் கொள்ளட்டும். அதனால் லைவ் அப்டேட்டை உடனடியான நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட இணையதளத்திடம் கூறியுள்ளார்.

இதையடுத்தே, அந்த இணையதளம் லைவ் அப்டேட் செய்வதை நிறுத்திக் கொண்டது. வெளிவருவதற்கு முன்பே இது எப்படி சாத்தியமானது என்று விசாரிக்கையில், வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர்தான் அந்த இணையதளத்திற்காக இந்த லைவ் அப்டேட் செய்ததாக கூறப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் ‘கபாலி’ படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து யார் முதலில் தெரிவிப்பது என்ற போட்டியின் அடிப்படையிலேயே, இந்த இணையதளம் இந்த மாதிரியான முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது. 

Similar News