சினிமா

விவசாயமும் சினிமாவும் அழிந்து வருகிறது: வசந்த பாலன் வருத்தம்

Published On 2016-06-25 13:56 GMT   |   Update On 2016-06-25 13:57 GMT
பகிரி இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இயக்குனர் வசந்த பாலன், விவசாயமும், சினிமாவும் அழிந்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.
கருணாஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பகிரி’. இதில் நாயகனாக பிரபு ரணவீரனும் நாயகியாக ஷர்வியாவும் நடித்துள்ளார்கள். இசக்கி கார்வண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘வாட்ஸ்அப்’ஐ மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில், படத்தின் நாயகன் பிரபு ரணவீரன், நாயகி ஷர்வியா, இயக்குனர் இசக்கி கார்வண்ணன், ரவிமரியா, வெங்கடேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக நமிதாவும், இயக்குனர் வசந்த பாலனும் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் இசையை வெளியிட்டு பேசிய வசந்த பாலன், ‘‘பகிரி படத்தை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். ஒரு விவசாயி தன்னுடைய மகன் மருத்துவராகவும், இன்ஜினீயராகவும் ஆக்காமல், விவசாயியாக ஆக்க முயற்சி செய்கிறார். ஆனால், மகனோ விவசாயம் செய்ய மறுக்கிறான். இதை படத்தின் கருவாக வைத்து இயக்கி இருக்கிறார்.

விவசாயம் அழிந்து வருவதை கூறியிருக்கிறார். ஆனால், தற்போதுள்ள தமிழ் சினிமாவில் சினிமாவே அழிந்து வருகிறது. குறிப்பிட்ட நடிகர்கள் படம் மட்டும்தான் சிறப்பாக ஓடுகிறது. மற்ற படங்கள் எல்லாம் தோல்வியடைந்து செல்கிறது. இதனால் சினிமாவையும், விவசாயத்தை காக்க வேண்டும்’’ என்று பேசினார்.

Similar News