சினிமா

கபாலி டீசருடன் படப்பிடிப்பை முடித்த ரம் படக்குழுவினர்

Published On 2016-06-18 07:59 GMT   |   Update On 2016-06-18 07:59 GMT
ரம் படக்குழுவினர் ரஜினியின் கபாலி டீசருடன் படப்பிடிப்பை முடித்து கொண்டாடியுள்ளனர்.
ரிஷிகேஷ், ‘அஞ்சாதே’ நரேன், விவேக், மியா, சஞ்சிதா ஷெட்டி, அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரம்’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு வியாழன் அன்று முடிந்தது. இடைவிடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு படக்குழுவினருக்கு இருந்தாலும், படப்பிடிப்பு நன்றாக முடிந்து, படமும் நன்றாக வந்து இருக்கிறது என்கிற உற்சாகம் இருந்ததால் அதை கொண்டாட விரும்பினார்கள்.

விவேக் இருக்குமிடத்தில் ஐடியாவுக்கா பஞ்சம். ஊரே கொண்டாடிவரும் ‘கபாலி’ டீசரை நாமும் பார்த்து கொண்டாடலாம் என்றார் விவேக். படப்பிடிப்பு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவும் உடனடியாக ஒரு பெரிய ஸ்க்ரீன் ஏற்பாடு செய்து 'கபாலி' டீசர் பார்க்க ஏற்பாடு செய்தார்.

இதை பார்த்தவுடன் படப்பிடிப்பை விரைவில் முடித்த மகிழ்ச்சியுடன் உற்சாக குரல் எழுப்பி 'ரம்' படப்பிடிப்பு குழுவினர் 'கபாலி' டீசருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Similar News