சினிமா

காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷால்

Published On 2016-05-26 12:22 GMT   |   Update On 2016-05-26 12:22 GMT
விஷால் தற்போது நடித்து வரும் ‘கத்திச்சண்டை’ படப்பிடிப்பில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மருது’. கொம்பன் முத்தையா இயக்கிய இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். இப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷால் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சி ஒன்று சென்னையில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விஷாலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இது குறித்து விஷால் கூறும்போது, ‘படப்பிடிப்பில் எனக்கு காயம் ஏற்பட்டது. சாதாரணமான காயம் தான். பயப்படும் அளவிற்கு பெரிய காயம் இல்லை. தோள்பட்டையில் சிறிய காயம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன்’ என்றார்.

வலியை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Similar News