ஆன்மிகம்

மகம் நட்சத்திரக்காரர்களை பணக்காரராக மாற்றும் விரத வழிபாடு

Published On 2019-03-22 08:42 GMT   |   Update On 2019-03-22 08:42 GMT
ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம்.
மனித பிறவி எடுத்ததன் பயன் உயர்வான தெய்வீக நிலையான ஞான நிலை அடைவதாகும். இதற்கு முதலில் ஒவ்வொருவரும் ஆத்ம ஞானம் பெற வேண்டும். ஆனால் மிக எளிதாக நினைத்த உடன் எல்லோராலுமே இத்தகைய உயரிய நிலையை அடைந்து விட முடியாது.

ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகன் என்றழைக்கப் படும் கேது கிரகத்தின் நிலை சிறப்பாக இருந்தால் மட்டுமே அவர் ஞானம் அடைய முடியம். அந்த கேது பகவானின் ஆதிக்கத் தில் மகம் நட்சத்திரக்காரர்கள் வருகிறார்கள்.

27 நட்சத்திர வரிசைகளில் 10-வது நட்சத்திரமாக வருவது மகம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரக நாயகர்களில் நிழல் கிரகங்களில் ஒருவரான கேது ஆவார்.

மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று இந்நட்சத்திரத்தை பற்றிய ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சில பரிகார பூஜைகளை செய்தால்தான் உரிய பலன்களை பெற முடியும் என்று கூறப்படுகிறது.

மகம் நட்சத்திரகாரர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் தங்களின் பிறந்த நட்சத்திர தினத்தன்று திருப்பாம்புரம் சென்று விரதம் இருந்து அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். விரதம் இருந்து சித்தர்கள், ரிஷிகள் ஆகியோர்களின் ஜீவ சமாதி கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். சிவயோகிகள், ஞானிகள் போன் றோருக்கு அன்ன தானம் அல்லது சேவைகளையோ செய்ய வேண்டும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக்காரணம் கொண்டும் பாம்புகளை துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. பாம்பு வசிக்கும் புற்றுகளையும் இடிக்க கூடாது. வருடந்தோறும் வரும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். தினமும் காலையில் மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது கேது பகவானின் அருளை பெற்று தரும்.
Tags:    

Similar News