ஆன்மிகம்

கணவனை இழந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2019-02-05 07:02 GMT   |   Update On 2019-02-05 07:02 GMT
கணவனை இழந்தவர்கள் ரதசப்தமி விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில், மிக முக்கியமானது ரத சப்தமி. தை மாத வளர்பிறையில் ஏழாவது நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால், திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செல்வத்தைப் பெருக்கும் இந்த விரதம் மிகவும் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை, தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் விருத்தியாகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது.
Tags:    

Similar News