ஆன்மிகம்

செந்துறை புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி

Published On 2019-05-11 03:17 GMT   |   Update On 2019-05-11 03:17 GMT
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது.
செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தின் 126-வது திருவிழா 4 நாட்கள் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனிதர்களின் தேர் பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் பவனி நேதாஜி நகர், பாத்திமா நகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர்களில் வலம் வந்த புனிதர்கள் சொரூபங்களின் காலடியில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை வைத்து எடுத்தனர். பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், உப்பு, மிளகு, பொரி, வாழைப்பழம், நுங்கு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர்.

மேலும் நாட்டில் விவசாயம் செழிக்கவும், பருவமழை தவறாமல் பெய்யவும், அமைதி, சமாதானம் நிலவவும் வழிபாடு நடத்தப்பட்டது. தேர் பவனியையொட்டி வாணவேடிக்கை, பொய்க்கால் குதிரையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவை நடந்தது. இதில் செந்துறை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News