சினிமா

சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் இனியா

Published On 2019-04-15 13:18 GMT   |   Update On 2019-04-15 13:18 GMT
பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இனியா, தற்போது சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் நடித்து வருகிறார். #Iniya #Coffee
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.

ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை.



நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்க இருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுகொள்ள, மோகன் ராஜா பாடல்களை எழுத, வெங்கட்நாத் இசை அமைத்திருக்கிறார். வெகு நேர்த்தியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
Tags:    

Similar News